முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஜெய்சிங் ராவ் கெய்க்வாட் பாஜகவிலிருந்து விலகினார்
முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான ஜெய்சிங்ராவ் கெய்க்வாட் பாட்டீல், கட்சியிலிருந்து விலகினார்.
மும்பை, நவ-17

மகாராஷ்டிரத்தின் பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீலுக்கு அவர் தனது ராஜிநாமா கடிதத்தை இன்று காலை அனுப்பினார்.
இந்த ராஜிநாமா கடிதத்தில் ஜெய்சிங்ராவ் கூறியதாவது:-
“10 ஆண்டுகளுக்கும் மேலாகக் கட்சித் தலைமை என்னை தொடர்ந்து புறக்கணித்ததில் நான் வருத்தத்தில் உள்ளேன். எனவே நான் கட்சியில் இருந்து ராஜிநாமா செய்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
மேலும் மாநில பாஜக பிரிவில் இருந்தும், கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாகவும் கூறினார்.
ஜெய்சிங்ராவ் மத்திய மற்றும் மாநில அமைச்சரவைகளில் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
ஜெய்சிங் ராவ் விலகல் மராட்டிய மாநிலத்தில் பாஜகவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.பாஜகவில் பலர் இணைந்து வரும் சூழலில் கட்சியிலிருந்து விலகி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் ஜெய்சிங் ராவ்.