தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் ரெட் அலர்ட் எச்சரிக்கை..பலத்த மழை பெய்ய வாய்ப்பு..!

தூத்துக்குடி மாவட்டத்தில் அடுத்த 12 மணி நேரத்தில் அதிதீவிர கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறைந்தபட்சம் 21 செ.மீ.க்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி, நவ-16

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்தது. குறிப்பாக தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. காலை நேரத்தில் சற்று ஓய்ந்திருந்த மழை மீண்டும் காலை 9 மணிக்கு வலுத்துக் கொண்டது. காலை 9 மணிக்கு தொடங்கிய கனமழை பகல் 1 மணி வரை சுமார் 4 மணி நேரம் இடைவிடாது வெளுத்து வாங்கியது. அதற்குப் பிறகும் தொடர்ந்து லேசான மழை பெய்து கொண்டே இருந்தது. விட்டுவிட்டு பலத்த மழையும் பெய்தது. இந்நிலையில் தூத்துக்குடியில் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் ரெட்அலர்ட் விடப்பட்டுள்ளது. காலை 8.30 மணி வரை மிக கனமழை பெய்யும். தூத்துக்குடி துறைமுகப்பகுதியில் தற்போது வரை 16 செ.மீ மழை பதிவாகி உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *