7.5% உள் ஒதுக்கீட்டின் மூலம் மருத்துவ படிப்பு கனவு, நிஜமாகும் வாய்ப்பு பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் வேலுமணி பாராட்டு..!
சென்னை, நவ-16

மருத்துவப் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வெளியிட்டார். அதில், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் ஸ்ரீஜன் முதலிடத்தையும், நாமக்கல் வமாட்டத்தை சேர்ந்த மோகன பிரியா 2வது இடத்தையும் பிடித்துள்ளார்.
இந்த நிலையில் எம்பிபிஎஸ் பிடிஎஸ் தரவரிசைப்பட்டியலில் முதல் மூன்று இடங்களை பிடித்த மணவர்களுக்கு தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள அமைச்சர், தர வரிசைப் பட்டியலில், முதல் மூன்று இடங்களை பிடித்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.ஸ்ரீஜன், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ர. மோகனபிரபா, சென்னையைச் சேர்ந்த ஜி.ஸ்வேதா ஆகியோருக்கு பாராட்டுகள் என்றும், தாங்கள் விரும்பிய லட்சியம் ஈடேறி வாழ்வின் சிகரத்தை தொட வாழ்த்துகள் என பதவிட்டுள்ளார்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கிய 7.5% உள் ஒதுக்கீட்டின் மூலம் மருத்துவ படிப்பு கனவு, நிஜமாகும் வாய்ப்பு பெற்ற மாணவச் செல்வங்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள். மருத்துவ படிப்பு கனவு நிறைவேறிய இவர்கள் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.