கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை

கேரள மாநிலத்தில் வயநாடு, கோழிகோடு உள்பட 8 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம், நவ-16

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழையின் தொடக்க இடமான கேரளாவிலும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கேரள மாநிலத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என திருவனந்தபுரம் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனால் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், மலப்புரம், இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு ஆகிய 8 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *