அமித்ஷா தமிழகத்துக்கு அல்வா விற்கும் கதை சொல்ல வருகிறார்.. காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்
சென்னை, நவ-16

பா.ஜ.க-வின் முக்கியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா வருகிற 21-ந்தேதி தமிழகம் வருகிறார் என்று தமிழக பா.ஜனதா தலைவர் எல். முருகன் நேற்று தெரிவித்தார். மேலும், அமித் ஷாவின் தமிழக வருகை எதிர்க்கட்சிகளுக்கு பயத்தை தரும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் அமித்ஷா வருகை பற்றி கூறுகையில், அல்வா விற்பதைப் போன்ற பெரும் கதை ஒன்றை சொல்ல வருகிறார் அமித்ஷா. இதற்கு முன் பலமுறை தமிழகம் வந்த அமித் ஷா அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றார். மேலும், சிவகாசியில் உற்பத்தியாகும் உலகளவில் ஏற்றமதி செய்ய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் காங்கிரஸ் எம்.பி.க்கள் குரல் கொடுப்போம். பட்டாசு தொழிலை பாதுகாக்க நிரந்தரமாக உயர்மட்ட குழு ஒன்றை தமிழக அரசு அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.