பழங்குடி பெண்களுடன் நடனமாடிய தமிழிசை!!! வைரலாகும் வீடியோ

தெலுங்கானா, அக்டோபர்-23

தெலங்கானா ஆளுநரும், தமிழக பாஜக முன்னாள் தலைவருமான தமிழிசை செளந்தரராஜன் தெலங்கானாவில் பழங்குடியின பெண்களுடன் இணைந்து நடனம் ஆடி வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ்நாடு முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கடந்த மாதம் தெலுங்கானா ஆளுநராக பொறுப்பேற்றார். கடந்த 10 நாட்களுக்கு முன் தெலுங்கு மொழியில் வெளியான சைரா நரசிம்மா ரெட்டி படத்தைப் பார்த்துவிட்டு, அந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடந்திருந்த சிரஞ்சீவியை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

இந்நிலையில், பழங்குடியினர் வளர்ச்சி குறித்து தெலங்கானாவில் உள்ள ராஜ்பவனில் ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது. இந்த கூட்டத்தின்போது, தமிழிசை பழங்குடியினர் சிலருடன் சேர்ந்து நடனமாடி மகிழ்ந்தார்.

தமிழிசை தான் நடனமாடிய காட்சியைத் தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *