உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 5.48 கோடியை தாண்டியது..!
உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.48 கோடியைத் தாண்டியுள்ளது.
நவ-16

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.48 கோடியைக் கடந்துள்ளது.
உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 54,804,194 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 38,129,282 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 13 லட்சத்து 24 ஆயிரத்து 025 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 15,350,887 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 98,810 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-
அமெரிக்கா ;-
பாதிப்பு – 11,365,052,
உயிரிழப்பு – 251,832,
குணமடைந்தோர் – 6,934,613
இந்தியா ;-
பாதிப்பு – 8,845,617,
உயிரிழப்பு – 130,109,
குணமடைந்தோர் – 8,247,950
பிரேசில் ;-
பாதிப்பு – 5,863,093,
உயிரிழப்பு – 165,811,
குணமடைந்தோர் – 5,291,511
பிரான்ஸ் ;-
பாதிப்பு – 1,981,827,
உயிரிழப்பு – 44,548,
குணமடைந்தோர் – 139,810