ஜம்மு காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவம் பதிலடி..பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 8 பேர் பலி

ஜம்மு காஷ்மீர் மாநில எல்லைப்பகுதியான உரி வட்டாரத்தில் இந்தியா, பாக். படைகளுக்கிடையேயான தாக்குதலில் 8 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

ஜம்மு, நவ-13

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள இருநாடுகளுக்கும் இடையிலான எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அவ்வப்போது மோட்டார் குண்டுகளை வீசியும் துப்பாக்கிகளால் சுட்டும் இந்திய நிலைகளின் மீது அத்துமீறி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல்களுக்கு இந்திய படையினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று அத்துமீறி தாக்குதல் நடத்தினர். பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் எல்லை பாதுகாப்புப் படையை சேர்ந்த துணை ஆய்வாளர் ராகேஷ் தோவல் உயிரிழந்தார். அதேபோல் மேலும், இரு வீரர்களும் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலில் பொதுமக்கள் 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. இதில் 8 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் 2 அல்லது 3 பேர் பாகிஸ்தான் ராணுவத்தின் ஸ்பெஷல் சர்வீஸ் குரூப்பை சேர்ந்தவர்கள் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *