அரியானாவில் தொங்கு சட்டசபை?
புதுடில்லி, அக்டோபர்-23
அரியானாவில் தொங்கு சட்டசபையே அமையும் என இந்தியா டுடே – ஆக்சிஸ் மை இந்தியா இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியானா மற்றும் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.க. தான் வெற்றி பெறும் என பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் கூறி உள்ளன. இந்நிலையில் இந்தியா டுடே கருத்துக் கணிப்பில் தொங்கு சட்டசபை அமையவே அதிக வாய்ப்புள்ளதாக கூறுகிறது. ஒருவேளை அக்.24 அன்று வெளியிடப்படும் தேர்தல் முடிவுகளில் இந்தியா டுடே கருத்துகணிப்பு உண்மையாகும் பட்சத்தில், அது காங் மற்றும் பா.ஜ.க.விற்கு பெரிய சவாலை ஏற்படுத்தும்.

90 உறுப்பினர்களை கொண்ட அரியானா சட்டசபைக்கான தேர்தலில் ஆளும் பா.ஜ.க.வுக்கும், காங்கிரசுக்கும் கடும் போட்டி நிலவும். பா.ஜ.,வுக்கு 32 முதல் 44 இடங்களும், காங்கிரசுக்கு 30 முதல் 42 இடங்களும் கிடைக்கும். ஓட்டு சதவீத அடிப்படையில் பார்த்தால் பா.ஜ.க.வுக்கு 33 சதவீத ஓட்டுக்களும், காங்ரசுக்கு 32 சதவீத ஓட்டுக்களும், ஜெ.ஜெ.பி., கட்சிக்கு 14 சதவீத ஓட்டுக்கள் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.