பதற்றமானவர், பக்குவப்படாத தலைவர் ராகுல்காந்தி.. பாரக் ஒபாமா

பதற்றமானவர், பக்குவப்படாத தலைவர் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

நியூயார்க், நவ-13

பராக் ஒபாமா “எ பிராமிஸ்ட் லாண்ட் என்ற தலைப்பில் நினைவுக்குறிப்பு எழுதியுள்ளார். அதில், உலக உளவில் தான் சந்தித்த அரசியல் கட்சித் தலைவர்கள், உலகத் தலைவர்கள் குறித்து தெரிவித்துள்ளார். அந்த நூல் குறித்து தி நியூயார்க் டைம்ஸ் விமர்சனம் எழுதியுள்ளது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குறித்து ஒபாமா தெரிவித்துள்ளதாவது: “பதற்றமானவர், பக்குவப்படாத” தலைவர், மாணவரைப் போல பாடங்களை நன்றாகப் படித்து, ஆசிரியரை ஈர்க்கும் திறமை படைத்தவராக இருக்கலாம். ஆனால், குறிப்பிட்ட விஷயத்தில் ஆழ்ந்த அறிவு பெறுவதற்கான ஆர்வமோ அல்லது தகுதியோ இல்லாதவராக உள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து குறிப்பிடுகையில், அமெரிக்க முன்னாள் பாதுகாப்புத்துறை செயலாளர் பாப் கேட்ஸ், மன்மோகன் சிங் இருவரிடமும் எந்த உணர்ச்சிகளையும் வெளிக்காட்டாத ஒற்றுமை இருப்பதைக் கண்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2009-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஒபாமா, அவரின் மனைவி மிட்ஷெல் ஒபாமா ஆகிய இருவரும் இந்தியா வந்திருந்தபோது, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், அவரின் மனைவி குர்ஷரன் கவுர் ஆகிய இருவருடனும் அமர்ந்து விருந்து சாப்பிட்டதையும் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் குறித்து ஒபாமா குறிப்பிடுகையில், “உடல்ரீதியாக அவர் குறிப்பிட்டுச் சொல்லும்படி இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராகப் போகும் ஜோ பைடன் குறித்து ஒபாமா குறிப்பிடுகையில், “மிகவும் ஒழுக்கமான, நேர்மையான, விசுவாசமான மனிதர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *