ஞானதேசிகன் மருத்துவமனையில் அனுமதி
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஞானதேசிகன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை, நவ-13

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஞானதேசிகனுக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர். ஞானதேசிகன் தமிழக காங்கிரஸ் தலைவராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.