வைரலாகும் விஜய்யின் வெறித்தனம் பாடல்
பிகில் திரைப்படத்துக்காக ஏ.ஆர். ரஹ்மான் இசையில் நடிகர் விஜய் பாடிய வெறித்தனம் பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை, செப்-01
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் பிகில். இப்படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். ஏற்கனவே இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள சிங்கப் பெண்ணே பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றநிலையில் வெறித்தனம் பாடலின் புரோமோ வீடியோவைப் படக்குழு நேற்று வெளியிட்டது. ஏ.ஆர்.ரகுமான், விஜய், அட்லி, பாடலாசிரியர் விவேக் ஆகியோர் இந்தப் பாடலின் இசையமைப்பில் ஈடுபட்ட காட்சிகள், ரசிகர்களிடயே இந்த பாடல் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது.
இந்நிலையில், இப்பாடல் இன்று மாலை 6 மணிக்கு யூடியூபில் வெளியிடப்பட்டது. ”நம்ம நெஞ்சுக்குள்ள குடியிருக்கும் நம்ம சனம், வெறித்தனம் இன்னா இப்ப லோக்கலுன்னா” என தொடங்கும் இப்பாடல் ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.