மகிழ்ச்சி, வளம், அமைதியை தீபாவளி திருநாள் வாரி வழங்கட்டும்… கவர்னர் பன்வாரிலால் வாழ்த்து..!

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழக மக்களுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை, நவ-13

தீபாவளி பண்டிகை நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழக மக்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துகள். வாய்மையும் அறமுமே இறுதியில் வெல்லும் என்பதை தீபாவளி திருநாள் எடுத்து இயம்புகிறது. ஒட்டுமொத்த தேசத்திற்கும் மகிழ்ச்சி, வளம், நல்லிணக்கம், அமைதியை தீபாவளி திருநாள் வாரி வழங்கட்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *