கோவையில் ஆதரவற்ற முதியோர், குழந்தைகளுக்கு தீபாவளி பரிசு.. S.P. அன்பரசன் வழங்கினார்
கோவை, நவ-12

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை குனியமுத்தூர் ஈஸ்வரி பிரார்த்தனை மண்டபத்தில் நல்லறம் அறக்கட்டளை மற்றும் கோயம்புத்தூர் நெட்வொர்க் பார் பீப்பிள் இணைந்து ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் S.P. அன்பரசன் கலந்து கொண்டு முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு தீபாவளி பரிசுகள் வழங்கினார்.

இதில் குனியமுத்தூர் பகுதி கழக செயலாளர் மதனகோபால் கோபால் ஸ்ரீதர் ஜெகன் சந்தோஷ் வடிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.