பண பலம், அதிகார பலத்தை பயன்படுத்தி பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி..தேஜஸ்வி யாதவ் புகார்
பாட்னா, நவ-12

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா, ஐக்கிய ஜனதா தள கூட்டணி, பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது;- ‘பீகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்துள்ளது. பண பலம், அதிகார பலத்தை பயன்படுத்தி ஆர்.ஜே.டி. வெற்றி பெறுவதை தடுத்து விட்டனர்.பீகார் தேர்தலில் மெகா கூட்டணிக்கே மக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.அதிகாரத்தில் நிதிஷ்குமார் இருந்தாலும் மக்கள் இதயங்களில் நாங்கள் தான் இருக்கிறோம். 2015ம் ஆண்டு மகா கூட்டணி உருவான போது, மக்களின் ஆதரவு எங்களுக்கு இருந்தது. மக்களின் ஆதரவு எங்களுக்கு இருந்தாலும் அதிகாரத்தை பெறுவதற்காக பாஜக பின்வாசல் வழியாக ஆட்சிக்கு வந்தது. பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்பட்டது. பீகார் தேர்தலில் பதிவான வாக்குகளை மீண்டும் என்ன வேண்டும். மிகவும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் 20 இடங்களை இழந்துள்ளோம். இறுதியாக எண்ணப்பட்ட அஞ்சல் வாக்குகளை மீண்டும் என்ன வேண்டும், ‘ என்றார்.