மக்களை மேலும் மேலும் குழப்ப வேண்டாம்.. பள்ளிகள் திறப்பு குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு என்ற அறிவிப்பு அரசின் ஊசலாட்ட மனநிலையைக் காட்டுகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை, நவ-12

இதுகுறித்து அவர் தனது முகநூலில், “தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு; பள்ளிகள் திறப்புத் தேதி குறித்து சூழ்நிலைக்கு ஏற்ப பின்னர் அறிவிக்கப்படும்!” – என்ற அறிவிப்பு இந்த அரசின் ஊசலாட்ட மனநிலையைக் காட்டுகிறது. எந்த முன்யோசனைகளும் இல்லாமல் அறிவிப்பதும், பின்னர் அதிலிருந்து பின்வாங்குவதும் எடப்பாடி அ.தி.மு.க. அரசின் வழக்கமாக ஆகிவிட்டது. கொரோனாவை விட அரசின் அறிவிப்புகளின் மூலமாக எழும் பீதிகள் தான் அச்சம் தருவதாக உள்ளது. குழப்பவாதிகள் கையில் அரசு இருக்கிறது என்பதற்கு பள்ளித்திறப்பு உதாரணம் ஒன்றே போதும்! குழப்ப அறிவிப்புகளின் மூலமாக மக்களை மேலும் மேலும் குழப்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.