பிரபல நகைச்சுவை நடிகருக்கு டாக்டர் பட்டம்…

அக்டோபர்-23

நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தவர் நடிகர் சார்லி. இவர் சமீபத்தில் நடிகர் விவேக்குடன் இணைந்து வெள்ளைப்பூக்கள் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகர் சார்லி தமிழ் திரைப்படத்தில் நகைச்சுவை என்ற தலைப்பில் செய்த ஆய்வுக்காக அவருக்கு தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டத்தை அளித்துள்ளது. இதனிடையே இதற்காக நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர் பாண்டியராஜன், பல்கலைக்கழகத் துணைவேந்தர் பாலசுப்பிரமணியன், பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *