‘முதல்வன்’ பட பாணியில் அசத்திய எடப்பாடி பழனிசாமி.. மனு கொடுத்த ஒரு மணி நேரத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பணி ஆணை..!

தூத்துக்குடியில் முதல்வரிடம் வேலை கேட்டு மனு அளித்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு ஒரு மணி நேரத்தில் பணி ஆணை வழங்கி முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அதிரடியாக உத்தரவிட்டார்.

தூத்துக்குடி, நவ-11

தூத்துக்குடி சுந்தர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரீஸ்வரி. இரண்டு கால்களையும் இழந்த மாற்றுத்திறனாளியான இவர் தனக்கு வேலை வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி வந்த தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியிடம் தென்பாகம் காவல் நிலையம் அருகே வைத்து மனு அளித்தார். இதையடுத்து அவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வரும்படி அழைத்த முதல்வர் உடனடியாக அவருக்கு பணி வழங்குவதற்கான ஆணை தயார் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி, மாரீஸ்வரிக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் புற ஆதார முறையில் வார்டு மேலாளர் பணி வழங்கி அதற்கான ஆணை வழங்கப்பட்டது. தனக்கு பணி வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதாக மாற்றுத்திறனாளி மாரீஸ்வரி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *