இந்தியாவில் கொரோனா பாதிப்பு 86 லட்சத்தை கடந்தது..!

நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.27 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 86 லட்சத்தை தாண்டியது.

டெல்லி, நவ-11

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 86,36,012 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 44,281 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 512 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,27,571ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 80,13,784 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 50,326 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 4,94,657 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.48 சதவீதமாக நீடிக்கிறது. குணமடையும் விகிதம் 92.79 சதவீதமாக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 5.83% ஆக குறைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *