வேல் யாத்திரை முக்கியமா என்பதை பாஜக எண்ணிப்பார்க்க வேண்டும்.. அமைச்சர் மா.பா.பாண்டியராஜன்

சென்னை, நவ-10

வேல் யாத்திரை குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், அரசாங்கத்திற்கு ஒத்துழைக்க வேண்டியது பாஜகவின் கடமை. அவர்கள் தற்போது செய்து வரும் செயல் மக்களிடம் நல்ல முறையில் போய் சேருகிறதா? என்பதை அவர்கள் பார்க்க வேண்டும். அவர்களின் அரசியல் ரீதியான நடவடிக்கைகளுக்கு நாங்கள் ஆதரவும் கிடையாது. எதிர்ப்பும் கிடையாது. பாஜக தற்போது மேற்கொண்டு வரும் செயல்கள் மக்கள் நலனுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய செயல்கள் என்ற எண்ணம் மக்களுக்கு வந்துவிடக்கூடாது. 100 பேருக்கு மேல் ஒன்று கூடினால் கைது செய்ய வேண்டும் என்பது தற்போது கொரோனா காலத்தில் உள்ள ஊரடங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை. அதைத்தான் வேல் யாத்திரை விவகாரத்தில் தற்போது நாங்கள் செய்து வருகிறோம். யாத்திரை போன்ற ஆர்ப்பாட்ட, ஆரவார அரசியல் தேவை அற்றது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாரதீய ஜனதா உதவினால்தான் மக்கள் மனதில் நிலைத்த இடம் கிடைக்கும். அதிமுக இந்து மத வழிபாட்டிற்கு எதிரானது அல்ல. பா.ஜனதா கட்சியை வளர்க்க பல்வேறு வழிகள் உள்ளன’’என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *