நகை வாங்க இதுதான் சரியான நேரம்.. தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,248 குறைந்தது
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 1,248 குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூபாய் 4,766க்கும் ஒரு சவரன் ரூபாய் 38,128க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.410 குறைந்து ரூ.66.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை, நவ-10

தீபாவளி பண்டிகை நெருங்கும் வேளையில் கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை சரிவதும், உயர்வதும் என விற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக தங்கத்தில் விலை இன்று ஒரேநாளில் சவரனுக்கு ரூபாய் 1248 குறைந்து, ரூபாய் 38,128க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று 9ம் தேதி தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.38 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,922க்கும், சவரனுக்கு ரூ.304 அதிகரித்து ஒரு சவரன் ரூ.39,376க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 1,248 குறைந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு 156 குறைந்து 4 ஆயிரத்து 766 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது நகை வாங்குவோர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 4 ரூபாய் 10 காசு குறைந்து 66 ரூபாய் 90 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.