பள்ளி, கல்லூரிகளை 3 மாதத்திற்கு பிறகே திறக்க வேண்டும்… பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்..!
பள்ளி, கல்லூரிகளை 3 மாதத்திற்கு பிறகே திறக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
புதுச்சேரி, நவ-9

இது தொடர்பாக புதுச்சேரியில் இன்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், தமிழகத்தில் கொரோனா தொற்று இருப்பதால் பள்ளி, கல்லூரிகளை 3 மாதத்திற்கு பிறகே திறக்க வேண்டும். தமிழக பாஜக சார்பில் வேல் யாத்திரை முன்னெடுக்கப்பட்டுள்ளது. வேல் யாத்திரைக்கான நோக்கம் என்ன? கறுப்பர் கூட்டத்திற்காக யாத்திரை நடத்தப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பினார். தற்போது வரை அதிமுக கூட்டணியில்தான் தேமுதிக இருக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.