அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கான மறுதேர்வு அட்டவணை வெளியீடு..!
பொறியியல் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு மறுதேர்வுக்கான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
சென்னை, நவ-9

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில், பொறியியல் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் கடந்த செப்டம்பர் இறுதியில் ஆன்லைன் மூலமாக செமஸ்டர் தேர்வு நடத்தப்பட்டது. இதில் இணையதளக் கோளாறு மற்றும் தொழில்நுட்பக் காரணங்களால் பல மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் கூறியிருந்த நிலையில், ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் தனித்தனியாக மறுதேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இறுதியாண்டு மாணவர்களுக்கான மறுதேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி நவம்பர் 17-ம் தேதி முதல் 21-ந் தேதி வரை மறுதேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடப்பிரிவு மாணவர்களுக்கும் தனித்தனியாக அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இது ஒருமணி நேர தேர்வாக ஆன்லைனில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.