ரவுடிகளுடன் வீட்டுக்குள் நுழைய முயற்சி.. ஜெ.தீபா பரபரப்பு புகார்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா, தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியுள்ளார்.

சென்னை, நவ-9

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா, இது தொடர்பாக வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில் கூறியுள்ளதாவது: “கடந்த மூன்று ஆண்டுகளாகவே தொலைபேசி மூலம் மிரட்டுகிறார்கள். இரவு பகல் பாராமல் தொலைபேசி மூலம் தொந்தரவு கொடுக்கின்றனர். ரவுடிகளுடன் வீட்டுக்குள் நுழைய முயற்சிக்கின்றனர். என்னுடைய முன்னாள் உதவியாளர் ராஜா நாங்கள் செல்லும் இடமெல்லாம் தொடர்ந்து வருவதால் பயமாக இருக்கிறது. கால்கள் நடக்க முடியாத நிலையில் சிகிச்சை எடுத்து வருகிறேன். ஆதலால், இந்த ஆடியோவை அடிப்படையாக கொண்டு காவல் ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *