இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,903 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 85.53 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில், 79.17 லட்சம் பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

டெல்லி, நவ-9

Municipal workers in protective gear carry the body a woman who died due to coronavirus disease (COVID-19), for her cremation at a crematorium in Ahmedabad, India, April 17, 2020. REUTERS/Amit Dave

இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 85,53,657 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 45,903 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 490 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,26,611 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 79,17,373 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 48,405 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 5,09,673 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.48 சதவீதமாக உள்ளது. குணமடையும் விகிதம் 92.56 சதவீதமாக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *