தாயை திட்டியதால் ஆவேசம்.. தனியார் தொலைக்காட்சி நிருபர் படுகொலை.. காஞ்சிபுரத்தில் வெறிச்செயல்..!
காஞ்சிபுத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிறுவர் உட்பட மூன்று இளைஞர்களை சோமங்கலம் காவல்துறையினர் கைது செய்தனர்.
காஞ்சிபுரம், நவ-9

காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் காவல் எல்லைக்குட்பட்ட நடுவீரப்பட்டு அடுத்த பழைய நல்லூரில் மோசஸ் (வயது 28) என்பவர் தன் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றார். இவர் தமிழன் தொலைக்காட்சியில் சோமங்கலம் பகுதியின் செய்தியாளராக பணி செய்து வந்தார்,
இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் இருந்த போது தொலைப்பேசி எண் கேட்பது போன்று வெளியில் வரவழைத்து அவரை மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் வெட்டி விட்டு ஓடி விட்டனர்.
பழையநல்லூர் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் முன்விரோதம் காரணமாக நிருபர் மோசஸை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் மோசஸ் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த வழக்கில் பழைய நல்லூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்ற எளியாப்பூ (வயது 20) அட்டை என்ற வெங்கடேசன் என்ற சிறுவன், மனோஜ் (வயது 19) ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலைக்கு காரணமாக இருந்த ரியல் எஸ்டேட் செய்யும் நவமணி என்பவரை சோமங்கலம் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
விக்னேஷ் என்ற எலியாப்பூவின் அம்மாவை மோசஸ் கெட்ட வார்த்தைகளில் திட்டிய காரணத்தினால் தன்னுடைய இரண்டு நண்பர்கள் மனோஜ் மற்றும் வெங்கடேசன் ஆகியவர்களை அழைத்துக் கொண்டு வந்து போதையில் மோசஸை வீட்டின் வெளியே அழைத்து கடுமையாக வெட்டி படுகொலை செய்தனர்.
கொலை செய்யப்பட்ட மூன்று குற்றவாளிகளையும் காவல்துறையினர் இரண்டு மணி நேரத்தில் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.