பிரபல நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதி..!

பிரபல நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

ஐதராபாத், நவ-9

தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சிரஞ்சீவி. இவர் ’சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தை அடுத்து அவர் தற்போது ’ஆச்சார்யா’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். பிரபல இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கி வரும் இந்த திரைப்படத்தில், இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. இது சிரஞ்சீவி நடிக்கும் 152-வது படம். இசை – மணி சர்மா. ஒளிப்பதிவு – திரு.

கொரோனா காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் நவம்பர் 9 ஆம் தேதி மீண்டும் படப்பிடிப்பு தொடங்க இருந்தது.இந்நிலையில் படப்பிடிப்புக்கு முன்னர் சிரஞ்சீவி உள்ளிட்ட படக்குழுவினர்க்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் சிரஞ்சீவிக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இதுபற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் சிரஞ்சீவி கூறுகையில்,
ஆச்சார்யா படப்பிடிப்புக்கு முன்பு பரிசோதனை மேற்கொண்டதில் துரதிர்ஷ்டவசமாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எனக்கு எவ்வித அறிகுறிகளும் இல்லை. வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். கடந்த ஐந்து நாள்களில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், பரிசோதனை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். கொரோனாவிலிருந்து மீள்வது குறித்த தகவல்களை விரைவில் வெளியிடுகிறேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *