இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கப் பார்க்கிறார்கள்.. மு.க.ஸ்டாலின் ஆவேசம்

சென்னை, நவ-8

ஒருங்கணைந்த வேலூர் மாவட்டத்தில் திமுக சார்பில் தமிழகம் மீட்போம் என்ற பொதுக்கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நேற்று நடைபெற்றது. இதில், காணொலி வாயிலாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசும்போது, ‘‘ரத்து செய்யப்பட்ட வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவை தோற்கடிக்க பல்வேறு திட்டங்களை தீட்டியவர்களுக்கு அதை வென்று காட்டி பாடம் புகட்டியுள்ளோம். ஜெயலலிதா இறந்ததாலும், சசிகலா சிறை சென்றதாலும், ஓபிஎஸ் தனியே சென்றதாலும் முதல்வரானவர் எடப்பாடி பழனிசாமி. ஆளும் அதிகாரத்தை வைத்து எதையும் அதிமுக அரசு செய்யவில்லை.

தமிழகத்தை ஒட்டுமொத்தமாக எடப்பாடி அடமானம் வைத்துள் ளார். அதை நாம் மீட்க வேண் டும். தமிழர்களின் மொழி, கலாச் சாரத்துக்கு ஆபத்து வந்துவிட்டது. இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கப் பார்க்கிறார்கள். ஒரே மொழி, ஒரே மதம் என மாற்ற நினைக்கிறார்கள். அதை ஒழிக்க வேண்டும்’’ என்றார்.

வேலூரில் நடைபெற்ற காணொலி காட்சி பொதுக்கூட்டத் தில் பங்கேற்ற திமுக பொதுச்செய லாளர் துரைமுருகன் பின்னர், செய்தியாளர்களிடம் கூறும் போது, ‘‘தமிழகத்துக்கு நீர் மேலாண்மையில் விருது கொடுத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. எனது சொந்த மாவட்டம் மற்றும் சொந்த தொகுதியான காட்பாடி பகுதியில் பல ஏரிகளை தூர்வாரி விட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்தே தமிழகத்தில் நீர் மேலாண்மை என்பது முழுமை யாக நடைபெறவில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது.

சட்டப்பேரவை உறுப்பினருக்கு தெரியாமலேயே ஏரிகளை தூர்வாரி விட்டதாக கணக்கு காட்டுகிறார்கள். தமிழகத்தில் மூன்றாவது கட்சி கூட்டணி அமைக்கலாம். அது கமலின் தனிப்பட்ட கருத்து. அது அவரது தன்னம்பிக்கை, தைரியம். அதைப் பற்றி நான் கூறுவதற்கு ஒன்றும் இல்லை.

தமிழகத்தில் பாஜகவினரின் வேல் யாத்திரை மீண்டும் தொடங்கும் என்று தமிழக பாஜக தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார். மத்தியில் பாஜக ஆட்சியும், மாநிலத்தில் அவர்களுக்கு கைகட்டி நிற்கின்ற ஆட்சி நடைபெறுகிறது. எனவே பாஜகவினர் எங்களுக்கு என்ன கவலை என்ற எண்ணத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதில் திமுக உறுதியாக உள்ளது’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *