ஸ்டாலின் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்படும்.. அமைச்சர் தங்கமணி எச்சரிக்கை..!

நாமக்கல், நவ-7

நாமக்கல் மாவட்டத்தில் ரூ.336 கோடி செலவில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. தேர்தலுக்குள் கட்டுமான பணியை முடித்து விட வேண்டும் என பணிகள் தீவிரமாக கட்டப்பட்டு வருகின்றது. இந்நிலையில், மருத்துவ கல்லூரியின் முகப்பு மண்டபம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் கட்டட தொழிலார்கள் சிலர் காயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்துக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின், ஆளுங்கட்சியின் அலட்சியமும், ஊழலுமே விபத்துக்கு காரணம் என குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கமணி, “நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏகேபி சின்ராசு நாமக்கல் மருத்துவ கல்லூரி கட்டடம் இரவே இடிந்து விழுந்து விட்டதாகவும் ஆம்புலன்சில் வந்து விபத்தில் சிக்கிய மருத்துவமனை ஊழியர்களை எடுத்துச் சென்றதாகவும் ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் இதை நிரூபிக்காவிட்டால் அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்படும். இந்த விஷயத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பெரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது ஆட்சிக்காலத்தில் கோவை அம்மன் குளத்தில் 45 அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்துள்ளன. அதனை மறந்துவிட்டு பேசுகிறார். அவரது ஆட்சிக்காலத்தில் தர்மபுரியிலும் மருத்துவமனை கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. இதனை வைத்து நாங்கள் அவர்களைப் போல அரசியல் செய்ய விரும்பவில்லை.
எதிர்க்கட்சி பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் ஒரு அறிக்கை விட்டு இருக்கிறார். அதாவது விவசாயத்திற்கு மும்முனை இணைப்பு கொடுப்பதை நேரம் மாற்றி இருப்பதை இலவச மின்சாரத்தை ரத்து செய்வதற்கு ஒரு முன்னோட்டமா.? என்று கூறியுள்ளார். அவர்கள் மின்சாரத்தை பற்றி பேச தகுதி அற்றவர்கள் அவர்களுடைய ஆட்சி காலத்தில் 18 மணி நேரம் மின்வெட்டு இருந்தது என்பதை நினைவுப்படுத்துகிறேன்” எனக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *