தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11,324 ஆக உயர்வு..!

தமிழகத்தில் இன்று புதிதாக 2 ஆயிரத்து 341 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, நவ-7

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் இன்று 2 ஆயிரத்து 341 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 41 ஆயிரத்து 488 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் புதிதாக 603 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 25 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 11,324 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 2,352 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 7,11,198 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *