திருமண மண்டபத்தில் கரண்ட் இல்லை என கைதான பாஜகவினர் சாலை மறியல்.. போலீஸ் அதிகாரி சட்டையை பிடித்து வாக்குவாதம்
தடையை மீறி வேல்யாத்திரை நடத்தி கைதான பாஜக-வினர் திருமண மண்டபத்தில் வசதி இல்லை என திடீர் சாலை மறியலில் ஈடுபட்டததோடு மட்டுமில்லாமல் போலீஸ் அதிகாரி சட்டையை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் திருத்தணி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர், நவ-6

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் தடையை மீறி வேல் யாத்திரை நடத்திய பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பாஜக வினரை கைது செய்த திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தலைமையிலான போலீசார் அவர்களை தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். அப்போது அங்கு மின்சாரம் இன்றி இருந்ததால் ஆத்திரமடைந்த பாஜகவினர் கண்டன கோஷம் எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் மண்டபத்தில் மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் இல்லை என்று திடீர் மறியல் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த பேச்சுவார்த்தை நடத்திய எஸ்.பி சட்டையை பிடித்து வாக்குவாதம் செய்ததால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனின் சட்டையை பிடித்தும் தள்ளி விட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, கட்சியினரை சமரசம் செய்து போராட்டத்தை கைவிட செய்து மீண்டும் மண்டபத்திற்குள் அழைத்து சென்றனர்.