ஜப்பான் புதிய மன்னர் நருஹிட்டோ பதவியேற்பு

ஜப்பான் நாட்டின் புதிய மன்னராக நருஹிட்டோ இன்று  பதவியேற்றார்.

டோக்கியோ.அக்டோபர்.22

ஜப்பான் நாட்டின் 125-வது மன்னர் அகிஹிட்டோ பதவி விலகியதை தொடர்ந்து  அவரது மகன்  நருஹிட்டோ இன்று புதிய மன்னராக பதவி ஏற்றார்.

அகிஹிட்டோ அவரது மகன்  நருஹிட்டோ

 ஜப்பான் நாட்டில் மன்னர்கள்  பொதுவாக பதவி விலகுவதில்லை, 85 வயதான  அகிஹிட்டோ தனது முதுமை மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக பதவி விலகுவதாக அகிஹிட்டோ அறிவித்தார். இதையடுத்து 2017 ஜூன் மாதம்  நாடாளுமன்றத்தில் மன்னர், பதவி விலகுவதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது.  ஏப். 30 2019 ல் மன்னர் பதவி விலக விரும்புவதாக 2017 டிசம்பரில் பிரதமர் ஷின்சோ அபே அறிவித்தார். அதன்படி டோக்கியோ இம்பீரியல் அரண்மனையில் மன்னர் அகிஹிட்டோ பதவி விலகும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் அவரது மூத்த மகனான 59 வயது நருஹிட்டோ, ஜப்பானின் புதிய மன்னராக முடிசூடிக் கொண்டார்.

மன்னரும் ராணியும் அரியணை ஏறும் காட்சி

 எளிய முறையில்  நடைபெற்ற விழாவில் ‘கிறிசாந்தமம்’ அரியணை அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. மன்னருடன் அவரது மனைவி மசாக்கோ ராணியாக அரியணை ஏறினார்.இவர்களுக்கு ஐக்கோ(17) என்னும் ஒரே மகள் உள்ளார். அந்நாட்டின் மரபுகளின்படி அரச குடும்பத்தின் பெண் வாரிசுகள் யாரும் பதவிக்கு வர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. 

 விழாவில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே,அரச குடும்பத்தினர், உறவினர்கள் பிரிட்டன் இளவரசர் சார்லஸ், தென்கொரியா பிரதமர் லீ நாக்-யோன், 190 நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு பிரமுகர்கள் என சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஷின்சோ அபே

அரியணை ஏறிய மன்னர் மரபுகளின்படி ஊர்வலமாக அழைத்து செல்லப்படும் சம்பிரதாய நிகழ்ச்சி மட்டும் நவம்பர் 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *