இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு..!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 84 லட்சத்தை கடந்துள்ள நிலையில், 77.65 லட்சம் பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

டெல்லி, நவ-6

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 84 லட்சத்தை கடந்துள்ளது. மொத்த பாதிப்பு 84,11,724 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 47,638 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 670 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,24,985 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 77,65,966 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 54,157 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 5,20,773 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.49 சதவீதமாக உள்ளது. குணமடையும் விகிதம் 92.32 சதவீதமாக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *