அரசியல் கட்சியை பதிவு செய்தது நான்தான், விஜய் இல்லை – எஸ்ஏ சந்திரசேகர் அதிரடி விளக்கம்

அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சிக்கு நான் தான் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளேன் என நடிகர் விஜய்யின் தந்தையும், பிரபல இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை, நவ-5

நடிகர் விஜய் விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றி உள்ளதாகவும், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சி ஆரம்பக்க உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின, அத்துடன் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியின் பெயரை, அகில இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் நடிகர் விஜய் பதிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் பரவின.

இதை விஜய்யின் பிஆர்ஓ ரியாஸ் அகமது இந்த செய்தி பொய் என்று திட்டவட்டமாக மறுத்தார். நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை என்றார். அதேநேரம் விஜய் அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை என்றாலும் விஜய்யின் பெயரில் அரசியல் கட்சி இயக்கத்திற்கு விண்ணபிக்கப்பட்டிருப்பது உண்மை என்றே கூறப்பட்டது.

இந்நிலையில் அரசியல் கட்சியை பதிவு செய்ததற்கும், விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எஸ்ஏ சந்திரசேகர் விளக்கம் அளித்துள்ளார்.

அரசியல் கட்சியை பதிவு செய்வது எனது தனிப்பட்ட முயற்சி. விஜய் மக்கள் இயக்கம் இன்று நேற்று தொடங்கப்பட்டதல்ல, உறுப்பினர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவே அரசியல் கட்சி. எதிர்காலத்தில் இந்த இயக்கத்தில் விஜய் இணைவாரா என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும். விஜய்யின் ரசிகனாக நான் இந்த இயக்கத்தை தொடங்கியுள்ளதாக அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் கருத்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *