தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு விரைவில் தடை.. முதல்வர் பேட்டி
அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
கோவை, நவ-5

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது;-
ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் தற்கொலை செய்துள்ளனர். இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணையில் உள்ளது. ஆன்லைன் ரம்மி சூதாட்டம் தொடர்பாக பல புகார்கள் தமிழக அரசுக்கு தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் அதனை தடை செய்ய அரசு முடிவெடுத்துள்ளது. ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் ஈடுபடுவது மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்ட தளங்கள் தடை செய்யப்படும், விளையாட்டில் ஈடுபட்டால் குற்றவாளிகளாக கருதப்படுவர். மேலும் பேசிய அவர் 144 தடை உள்ளதால் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க இயலாது என குறிப்பிட்டார்.
இந்தியாவில் யார் வேண்டுமானலும் கட்சி தொடங்கலாம் என நடிகர் விஜய் கட்சி தொடங்குவது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். ராஜிவ் கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலை விவகாரத்தில் கவர்னர் தான் முடிவெடுக்க வேண்டியுள்ளது. 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியது அதிமுக அரசு தான் என அவர் தெரிவித்துள்ளார்.