அரசியல் கட்சி தொடங்குகிறாரா விஜய்?.. வதந்திகளுக்கு விளக்கம்..!!

அரசியல் கட்சியின் பெயரைத் தேர்தல் ஆணையத்தில் நடிகர் விஜய் பதிவு செய்ததாக வெளியான தகவல் தவறானது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை, நவ-5

பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார் விஜய். மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு இசை – அனிருத். மாஸ்டர் படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் போன்றோர் நடித்துள்ளார்கள்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரையரங்குகள் இயங்கவில்லை. இதனால் மாஸ்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்கிற கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் விஜய் பதிவு செய்துள்ளதாக செய்தி ஒன்று வெளியானது. இதையடுத்து அரசியல் கட்சியைத் தொடங்க விஜய் தயாராகிவிட்டார் எனச் சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் பரபரப்பு அடைந்தனர்.
எனினும் இந்த விவகாரம் தொடர்பாக விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கட்சியின் பெயரைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ததாக வெளியான தகவல் தவறானது என விஜய்யின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் அகமது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *