என்ன குட்டிக்கரணம் அடித்தாலும் தமிழக மக்கள் பாஜகவை ஏற்க மாட்டார்கள்.. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கருத்து
பாரதிய ஜனதா கட்சி என்ன குட்டிக்கரணம் அடித்தாலும் தமிழக மக்கள் பாரதிய ஜனதா கட்சியை எப்போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு , நவ-5

ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
குஷ்பு பாரதிய ஜனதா கட்சிக்குச் சென்றது குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. அவர் எங்கிருந்தாலும் வாழ்க..அவர் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்களை விமர்சித்தால் நானும் விமர்சிப்பேன். பேரறிவாளன், நளினி தொடர்பான குற்றச்சாட்டுகள் ஆபத்தானவை எனக் கருத்துகள் வருகின்றன. அது உண்மை என்றால் அவர்கள் வழக்கிலிருந்து விடுதலை ஆவதில் ஆட்சேபனை இல்லை.ஆனால் அது சட்டத்துக்கு உட்பட்டுத்தான் இருக்க வேண்டும்.
வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் விளைபொருட்களை நிர்ணயம் ஒரு சில பணக்காரர்கள் கையில் தான் உள்ளது. தமிழகத்தில் பாரதிய ஜனதாவினர் வேல் யாத்திரை இல்லை என்ன குட்டிக்கரணம் அடித்தாலும் பாஜக வால் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது..திருமாவளவன் கூறி கருத்துகள் 100சதவீதம் உண்மையானவை.அவரது கருத்தை நான் ஆதரிக்கிறேன்.
முகஸ்டாலின் குறித்து விமர்சன போஸ்டர் ஒட்டப்பட்டு வருகிறது.ஆனால் அது குறித்து அவர் கவலைப்படவில்லை.ஆனால் விதிமுறைப்படி போஸ்டர் ஒட்டப்பட வேண்டும்.அவருக்கு எதிராக ஒட்டப்படும் போஸ்டரை நான் கண்டிக்கிறேன்.திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடர்கிறது.குறைவான தொகுதி கிடைக்கும் என்பது சிலர் தவறாக பரப்பிகுழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் பாஜக வை எதிர்த்து நாங்கள் தொடருவோம்..திமுகவுடன் கூட்டணி என்பது தேர்தலுக்கானது மட்டும் அல்ல ஒத்த கொள்கை கொண்ட கூட்டணி.
இவ்வாறு அவர் கூறினார்.