கோவா கடற்கரையில் ஆபாச வீடியோ எடுத்த நடிகை பூனம் பாண்டே கைது..!

கடற்கரையில் ஆபாசமான வீடியோ எடுத்ததற்காக சர்ச்சைக்குரிய இந்தி நடிகை பூனம் பாண்டே வடக்கு கோவாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பனாஜ், நவ-5

பாலிவுட் கவர்ச்சி நடிகையான பூனம் பாண்டே, இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். இவர், திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் சாம் பாம்வே என்பவரை கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் தேனிலவுக்காக கோவா சென்ற இடத்தில் தகராறில் ஈடுபட்டனர். கணவர் தன்னை அடித்து சித்ரவதை செய்ததாக போலீசிலும் புகார் அளித்தார். பின்னர் இருவரும் சமரசமாகி இணைந்தனர்.

இதற்கிடையே, பூனம் பாண்டே கோவாவில் உள்ள நீர்தேக்கம் அருகில் நின்று ஆடைகளை ஒவ்வொன்றாக களைந்து நிர்வாணமாக போஸ் கொடுத்து வீடியோ எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆபாச படம் எடுத்த பூனம் பாண்டே மீதும் அவருக்கு அனுமதி அளித்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோவா முன்னேற்ற கழக மகளிர் அணியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து, கோவா கடற்கரையில் ஆபாசமான வீடியோ எடுத்ததற்காக கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே வடக்கு கோவாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *