இந்தியாவில் கொரோனா பாதிப்பு 83 லட்சத்தை தாண்டியது..!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 83.64 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில், 77.11 லட்சம் பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

டெல்லி, நவ-5

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 83,64,086 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 50,209 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 704 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,24,315 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 77,11,809 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 55,331 பேர் குணமடைந்துள்ளனர். புதிய நோய்த்தொற்று எண்ணிக்கையை விட அதிக நபர்கள் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 5,27,962 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.49 சதவீதமாக உள்ளது. குணமடையும் விகிதம் 92.20 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 12,09,425 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 11,42,08,384 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *