குல்லா போடாம நோம்பு கஞ்சி குடிக்க தயாரா?.. கனிமொழிக்கு எச்.ராஜா கேள்வி
தேவர் பெருமானாரின் குருபூஜையில் திருநீறை தட்டி கீழே கொட்டிய நீங்கள் குல்லா போடாம நோம்பு கஞ்சி குடிக்க தயாரா? பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா, திமுக எம்.பி., கனிமொழிக்கு ஏள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை, நவ-4

கனிமொழி எம்பி, தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’தமிழ்க் கடவுளாக கொண்டாடப்படும் முருகனுக்கு யாத்திரை நடத்தவேண்டும் என்று அனுமதி கேட்கும் தமிழக பாஜக, அது போலவே தமிழைத் தேசிய மொழியாக்கவும் கோரிக்கை வைக்குமா?’’என கனிமொழி கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு ஹெச்.ராஜா, ‘’முதலில் தேவர் பெருமானாரின் குருபூஜையில் திருநீறை தட்டி கீழே கொட்டிய நீங்கள் குல்லா போடாம நோம்பு கஞ்சி குடிக்க தயாரா என்று சொல்லுங்க’’ என பதிலடி கேள்வி எழுப்பி இருந்தார்.