சீமான் பேச்சுக்கு கருத்தில்லை: வைகோ

சென்னை.அக்டோபர்.22

 மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ மீது பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகள் மீதான விசாரணை அடுத்த மாதம் 13 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நக்கீரன் கோபால் கைதின்போது சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையம் முன் தர்ணவில் ஈடுபட்டது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 2016ஆம் ஆண்டு அக்டோபர் 18 ஆம் தேதி எழும்பூரில் ரயில் மறியலில் ஈடுபட்டது, சேப்பக்கத்தில் தடையை மீறி நடைபெற்ற மே 17 இயக்கத்தின் ஈழ தமிழர்கள் நினைவேந்தல் நிகழ்சியில் பங்கேற்றது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைக்காக வைகோ இன்று  எழும்பூர் நீதி மன்றத்தில் ஆஜரானார்.  இதேபோல் திருமுருகன் காந்தியும் ஆஜரானார்.

 இதனையடுத்து சிறப்பு நீதிரோஸ்லின் துரை வழக்கின் விசாரணையை நவம்பர்  13ம் தேதிக்கு ஒத்திவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, கேரளா மீண்டும் முல்லை பெரியாரின் அணைகட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதனால் தமிழகம் 85,000 ஏக்கர் பாசன நிலத்தை இழக்க வேண்டிய அபாயம் ஏற்படும் தமிழக அரசு  உரிமைகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். ராஜீவ்காந்தி படுகொலை தொடர்பாக சீமான் கருத்து குறித்து பதிலளிக்க மறுத்த வைகோ அவர் அவர் கருத்தை அவர்கள் தெரிவிக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி செய்தியாளர்களிடம் பேசியபோது, 2018 ல் தமிழீழ நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்றதால் பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த அரசு தமிழீழ உணர்வாளர்கள் மீது வழக்குகளை பதிவு செய்கிறார்கள் இது கண்டிக்க தக்கது என்றார்.

‌ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேர் விடுதலையை தமிழக ஆளுநர் தடுத்தது அரசியல் சாசன விரோத செயல் என்று திருமுருகன் காந்தி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *