ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை வீடு புகுந்து அதிரடியாக கைது செய்தது மும்பை போலீஸ்
ரிபப்ளிக் தொலைகாட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை மும்பை போலீஸ் கைது செய்தது. வீட்டில் அதிரடியாக நுழைந்த மும்பை போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
மும்பை, நவ-4

மும்பை அலிபாக் பகுதியில் 2018ம் ஆண்டு இன்டீரியர் டிசைனர் அன்வாய் நாயக் மற்றும் அவரது தாய் தற்கொலை செய்த வழக்கு தொடர்பாக அர்னாப் கோஸ்வாமியை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஏற்கனவே டிஆர்பி முறைகேடு தொடர்பாக விசாரணை நடைபெறும் நிலையில், தற்கொலைக்கு தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில் அர்னாப் விசாரணை வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளார்.
கட்டட உட்புற வடிவமைப்பாளர் அன்வய் நாயக் அவர்களுக்கு அர்னாப் உள்பட 3 பேர் ரூ. 5.40 கோடி தராததால் அன்வய் தற்கொலை என புகார் கூறப்படுகிறது.2019ல் முடிக்கப்பட்ட வழக்கை மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் உத்தரவின் பேரில் போலீஸ் மீண்டும் விசாரணையை தொடங்கியது.
ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை போலீசார் இன்று விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். மும்பையில் உள்ள வீட்டில் இருந்து தன்னை போலீசார் வ லுக்கட்டாயமாக வேனில் ஏற்றி அழைத்துச் சென்றதாக அர்னாப் தெரிவித்துள்ளார்.