தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திடீர் டெல்லி பயணம்..!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திடீர் பயணமாக விமானத்தில் சென்னையில் இருந்துடெல்லி புறப்பட்டார்.

சென்னை, நவ-4

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் நேற்று சந்தித்து பேசினார்.மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். வரும் வெள்ளிக்கிழமை வரை டெல்லியில் தங்கியிருந்து ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து கவர்னர் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைக்குள்ளாகி சிறையில் இருந்து வரும் பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை மனு மீது செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், அவரது விடுதலை குறித்து தமிழக ஆளுநர் இரண்டாண்டுகளாக முடிவெடுக்காமல் இருப்பதற்கு அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில் ஆளுநர் டெல்லி பயணம் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *