அமெரிக்க அதிபர் தேர்தல்.. ஜோ பிடன் தொடர்ந்து முன்னிலை

அமெரிக்க அதிபர் தேர்தலில் முதல் கட்ட முடிவுகளில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார்.

வாஷிங்டன், நவ-4

உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப்பும் முன்னாள் துணை அதிபா் ஜோ பிடனும் இந்தத் தோ்தலில் போட்டியிடுகின்றனா். அதிபர் வேட்பாளர்களில் நேரடி போட்டியில் இருந்த டிரம்ப், ஜோ பைடன் ஆகியோர் பெற்ற வாக்குகள் மற்றும் பிரதிநிதிகளின் ஆதரவு குறித்த தகவல்கள் வெளியானவண்ணம் உள்ளன.

அமெரிக்க பாராளுமன்றத்தில் மொத்தம் உள்ள 538 பிரதிநிதிகளில் அதிபரை தேர்ந்தெடுக்க 270 பிரதிநிதிகளின் ஆதரவு தேவை. இந்திய நேரப்படி இன்று காலை நிலவரப்படி ஜோ பைடன் 129 வாக்குகளுடன் முன்னிலை பெற்றார். டிரம்ப் 108 வாக்குகளுடன் சற்று பின்தங்கியிருந்தார்.

அதன்பிறகும் பெரும்பாலான மாநிலங்களில் ஜோ பைடன் கை ஓங்கியது. 10.30 மணி நிலவரப்படி ஜோ பைடன் 223 வாக்குகளும், டிரம்ப் 166 வாக்குகளும் பெற்றிருந்தனர். ஆனால் பிரதிநிதிகள் அதிகம் உள்ள முக்கியமான மாநிலங்களில் டிரம்ப் முன்னிலை பெற்றிருந்தார்.

காலை நிலவரப்படி டிரம்ப் வெற்றி பெற்ற மாநிலங்கள்:

அலாஸ்கா, அர்கன்சாஸ், கான்சாஸ், கென்டக்கி, லூயிசியானா, மிசிசிப்பி, நெப்ராஸ்கா, வடக்கு டகோட்டா, ஓக்லஹாமா, தெற்கு டகோட்டா, டென்னிசி, மேற்கு விர்ஜினியா, வியோமிங், இண்டியானா, தெற்கு கரோலினா, உட்டா.

ஜோ பைடன் வென்ற மாநிலங்கள்:

கொலராடோ, கொலம்பியா, கனெக்டிகட், டெலாவர், இல்லினாய்ஸ், மேரிலேண்ட், மாசாசூசெட்ஸ், நியூ ஹாம்ஷயர், நியூ ஜெர்சி, நியூ மெக்சிகோ, நியூ யார்க், ரோட் தீவு, வெர்மான்ட், விர்ஜினியா, வாஷிங்டன், ஓரேகான், கலிபோர்னியா,

கொரோனா நோய்த்தொற்று நெருக்கடிக்கு இடையே, தோ்தல் தொடங்குவதற்கு சில நாள்களுக்கு முன்னரே தபால் மூலமும் நேரடியாகவும் சுமாா் 10 கோடி போ் வாக்களித்த நிலையில், வாக்குப் பதிவு தொடங்கிய பிறகு வாக்குச் சாவடிகளில் வாக்களாா்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனா். விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த வாக்குப் பதிவின் வாக்குகள் எண்ணப்பட்டுள்ள முடிவுகள், முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *