கொரோனா தொற்று அதிகம் பரவ பண்டிகை காலம் காரணமாகிவிட கூடாது.. அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை உருவாகாமல் இருக்க மக்களின் பங்களிப்பு அவசியம். ததொற்று அதிகம் பரவ பண்டிகை காலம் காரணமாகிவிட கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை, நவ-3

சென்னையில் இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று வேகமாக குறைந்து வருகிறது. கொரோனா பரிசோதனை முடிவுகளை வேகமாக அளிக்கும் வகையில் முன்னேற்றம் அடைந்துள்ளோம். ஒரு கோடி ஆர்டி பிசிஆர் கருவிகளை வாங்கி பயன்படுத்தி தமிழகம் முன்னோடியாக உள்ளது. தமிழகத்தில் 4.39 லட்சம் காய்ச்சல் முகாம்கள் இதுவரை நடத்தப்பட்டுள்ளன. கொரோனா இரண்டாவது அலை உருவாகாமல் தடுக்க மக்களின் பங்களிப்பு அவசியம். தொற்று அதிகம் பரவ பண்டிகைக் காலம் காரணமாகி விடக்கூடாது என்பதால் கவனமுடன் இருக்க வேண்டும். தமிழகத்தில் சுகாதாரத்துறை கட்டமைப்பு மிகச்சிறப்பாக உள்ளது.

வளர்ந்த நாடுகள் கூட கொரோனா பாதிப்பின் 2-வது தாக்கத்தில் இருந்து மீள இயலாத நிலையில், தமிழகம் மீள்கிறது.
தற்போது தொற்று உறுதியானவர்களில் 3.5% பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 3.34 லட்சம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன எனவும் கூறினார். தமிழகத்தில் 24 மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படுகின்றன. தமிழகத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.8 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *