தீபாவளி சிறப்பு பேருந்துகள் நவ.11 முதல் இயக்கப்படும்.. அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

தீபாவளி பண்டிகையையொட்டி குறைந்த அளவில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவிருப்பதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை, நவ-3

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 11,12, 13 தேதிகளில் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் மீண்டும் 15,16,17ம் தேதிகளில் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் கூறினார். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தீபாவளிக்கு குறைந்த அளவிலான அரசு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும், கடந்த ஆண்டு 18,554 பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 14,757 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன என்றும் கூறினார்.

மேலும், வழக்கம் போல சென்னையில் 5 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று கூறிய அமைச்சர் விஜயபாஸ்கர், 13 முன்பதிவு மையங்களில் இருந்து இதுவரை 27 ஆயிரம் பேர் சிறப்பு பேருந்துகளுக்கு முன்பதிவு செய்துள்ளனர் என்றும் இந்த ஆண்டு 5 லட்சம் பேர் அரசு பேருந்துகளை பயன்படுத்துவார்கள் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அவர், ‘தற்போதைய நிதி நிலையில், போக்குவரத்து ஊழியர்களுக்கு 10% மட்டுமே தீபாவளி போனஸ் வழங்க முடியும். போராட்டம் நடத்துவதாக இருந்தால் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்,’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *