பள்ளிகள் திறப்பில் அரசின் அவசர அறிவிப்பு ஏன் ? மு.க.ஸ்டாலின் கேள்வி

தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பேரிடர் காலத்தில் பள்ளிகள் திறப்பில் அரசின் அவசர அறிவிப்பு ஏன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை, நவ-3

இது குறித்து அவர் தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

பள்ளிகள், கல்லூரிகள் திறப்பில் அவசரகோலமான அறிவிப்பு ஏன்? கொரோனா குறித்த ஆராய்ச்சிகள், எச்சரிக்கைகள் கவனத்தில் எடுக்கப்பட்டனவா? பெற்றோர் – ஆசிரியர் – மருத்துவர்களுடன் ஆலோசனைகளைச் செய்தாரா முதலமைச்சர் திரு. பழனிசாமி?
ஜனவரி 2021-இல் அப்போதைய சூழலை ஆய்ந்துதான் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பை நிறுத்தி வைத்து, மாற்று அறிவிப்பை வெளியிட்டு மக்களின் மனப்பதற்றத்தைத் தணிக்க வேண்டும்!

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *