பயங்கரவாதிகள் தாக்குதல்: ஆஸ்திரியாவுக்கு இந்தியா துணை நிற்கும் என பிரதமர் மோடி ட்வீட்..!
டெல்லி, நவ-3

ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் 6 இடங்களில் நேற்று இரவு ஐஎஸ் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் பொதுமக்கள் 4 பேர் உயிரிழந்தனர். 17 பேர் படுகாயமடைந்தனர். பாதுகாப்பு படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் 1 பயங்கரவாதி கொல்லப்பட்டான்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் கண்டனம், இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திரமோடியும் ஆஸ்திரிய பயங்கரவாத தாக்குதலுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ’வியன்னாவில் நடந்த பயங்கரவாத தாக்குதால் மிகுந்த அதிர்சியும், வேதனையும் அடைந்தேன். இந்த துயரமான தருணத்தில் ஆஸ்திரியாவுடன் இந்தியா துணைநிற்கும். இந்த தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.