பேரறிவாளனின் கருணை மனு மீது முடிவெடுக்க ஆளுநர் தாமதிப்பது ஏன்?.. உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி..!

பேரறிவாளனின் கருணை மனு மீது தமிழக கவர்னர் தற்போது வரை முடிவெடுக்காதது தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

டெல்லி, நவ-3

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை செய்ய தமிழக சட்டசபையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இந்த தீர்மானம் மீது கவர்னர் தற்போதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இதற்கிடையில், தனக்கான தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியும் 2 ஆண்டுகளாக கருணை மனு மீது ஆளுநர் முடிவெடுக்கவில்லை என பேரறிவாளன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பேரறிவாளனின் கருணை மனு மீது தமிழக ஆளுநர் முடிவெடுக்காததற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். மேலும், பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் விரைவில் முடிவு செய்து உத்தரவிட வேண்டும் என விரும்புகிறோம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். பல்நோக்கு விசாரணைக்குழு அறிக்கைக்கும் பேரறிவாளன் விடுதலைக்கும் தொடர்பு இல்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *