திரையரங்குகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு..!!

சென்னை, நவ-3

தமிழகத்தில் நவ.10-ம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

  • திரையரங்கில் 50% இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த அனுமதி.
  • திரையரங்குகளுக்கு வெளியேயும், உள்ளேயும் 6 அடி இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
  • திரையரங்குகளில் உணவு, குளிர்பானங்கள் விற்பனைக்கு தடை.
  • நோய்கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள திரையரங்குகளை திறக்க அனுமதி இல்லை.
  • திரையரங்கு வளாகத்திற்குள் எப்பொழுதும் முகக்கவசம் அணிவது கட்டாயம்.
  • பொதுமக்கள் சுவாசம் சார்ந்த நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இருமல் மற்றும் தும்மலின் போது வாய் மற்றும் மூக்கை கைக்குட்டை கொண்டு கட்டாயம் மூடு வேண்டும்.
  • பொது இடங்களில் எச்சில் துப்புவது கண்டிப்பாக தடை செய்யப்பட வேண்டும்.
  • அனைவரும் ஆரோக்கிய சேது செயலியினை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.
  • திரையரங்கு நுழைவாயிலில் பொதுமக்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்ய வேண்டும்.
  • முகக்கவசம் அணியாதவர்கள் திரையரங்கிற்குள் அனுமதிக்ககூடாது.
  • திரையரங்கின் நுழைவாயில் மற்றும் பணி செய்யும் இடங்களில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வேண்டும்.
  • திரையரங்கு வளாகம் மற்றும் திரையரங்கிற்குள் பொது மக்கள் நுழையும் போதும், வெளியே வரும் போதும் சமூக இடைவெளியினை கடைபிடித்து வரிசையில் நிற்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.
  • ஒன்றுக்கு மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்களில் உள்ள திரையரங்குகள், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் உட்பட அனைத்து திரையரங்குகளிலும் பொது மக்கள் வரிசை வரிசையாக உள்ளே செல்வதையும், வெளியேறுவதையும் உறுதி செய்யும் பொருட்டு ஒவ்வொரு திரைப்பட காட்சிக்கும் இடையே கால இடைவெளி இருக்க வேண்டும்.
  • ஒவ்வருக்கொருவர் தொடர்பு இல்லாத டிஜிட்டல் முறையில் அனுமதி சீட்டுகள் வழங்குவது, சரிபார்ப்பது மற்றும் உணவு, குளிர்பானம் ஆகியவற்றிற்கு இணைய வழி, இ-வாலட், க்யூ.ஆர். குறியீடு மூலம் கட்டணம் செலுத்தும் முறையான நடைமுறைப்படுத்த வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *